பெரிய கள்ளிப்பட்டி ஊராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் , பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட , பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம் , பெரியகள்ளிப்பட்டி ஊராட்சி பெரிய கள்ளிப்பட்டி காலனி முதல் கருப்பராயன் கோயில் வரை கான்கிரீட் தடுப்பு சுவர் சுமார் ரூ : 22 லட்சம் மதிப்பீட்டிலும், பெரியகள்ளிப்பட்டி மெயின் ரோடு முதல் டீக்கடை வரை ரூ: 6 லட்சம் மதிப்பீட்டிலும், பணயம்பள்ளி ஊராட்சி அம்மா நகர் பகுதியில் தார்சாலை சுமார் ரூபாய் 18.14 லட்சம் மதிப்பீட்டிலும் பூமி பூஜை செய்து கட்டுமான பணியினை பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினரும், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் அ.பண்ணாரி பணியினை துவக்கி வைத்தார். நிகழ்வின்போது பெரியகள்ளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் துரை , பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி , பனையம் பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் நாகேந்திரன் , ஊராட்சி மன்ற துணை தலைவர் துரைசாமி , தாசம்பாளையம் மணி , நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி , பவானிசாகர் வடக்கு ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் ஏ.சோமசுந்தரம் , பெரியகள்ளிபட்டி ஊராட்சி மன்ற துணை தலைவர் தேவராஜ் , பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தங்கராஜ் , வழக்கறிஞர் வெற்றிவேல் , கிளை செயலாளர்கள் அப்பாச்சி ,பழனிச்சாமி , வேலுச்சாமி , தர்மன் , மகாலிங்கம் , பழனி, சரவணன் , பிரசாந்த் , தேவராஜ் , மாகாளி , சிவாஜி , சுப்பிரமணியம் , பூஜித் , காமேஷ் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் சார்பு அமைப்பு நிர்வாகிகள் ஏராளமானோர் நிகழ்வின் போது உடன் இருந்தனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments