• Breaking News

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் ஜூன் 11 ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை

     


    பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூன் 11இல் தமிழகம் வருகிறார். வேலூரில் பாஜக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த பேரணியில் கலந்துகொண்டு அமித்ஷா பேசுகிறார். முன்னதாக ஜூன் 8ம் தேதி இந்த பேரணி நடத்த திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாஜக அரசின் 9 ஆண்டுகள் சாதனைகளை விளக்கும் வகையில் ஒரு மாதத்திற்குள் 66 பொதுக்கூட்டங்களை நடத்த தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது.

    இதில் பாஜகவை சேர்ந்த பல தேசிய தலைவர்கள் தமிழக பொதுக்கூட்டங்களில் பேசுவார்கள். பாராளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் வலுவான இடத்தைப் பெற பாஜக இம்முறை கூட்டணிக்கட்சியான அதிமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்கும் என்று கூறப்படுகிறது. அமித்ஷாவின் தமிழக வருகையில் தேர்தல் தொகுதிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    No comments