"ஜல்லிகட்டுக்கு தடை இல்லை" உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பாக திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடையில்லை தமிழக அரசால் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பால் தமிழக முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர் இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பாக கோவில்பட்டி நகர திமுக கழகம் சார்பில் நகர செயலாளர் கருணாநிதி தலைமையில் ஏராளமான திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
No comments