• Breaking News

    பெண் விவசாயி கன்னத்தில் பளார் விட்ட காக்கி

     


    குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள படாலா அருகே உள்ள சீமா குடி கிராமத்தில் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, பெண் விவசாயியை போலீஸ் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

    நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.  அப்போது அந்த போராட்டத்தில் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணின் கன்னத்தில் போலீஸ் அறைந்தார்.இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, நெட்டிசன்கள், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து காவல் துறை தரப்பில் என்ன விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால், அந்த பெண் தாக்க முன்றதாகவும், தற்காப்புக்காகவே அறைந்ததாக தெரிவிக்கப்ட்டுள்ளது.


    வீடியோ பார்க்க

    https://twitter.com/phul_surjeet/status/1659138254652997633?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1659138254652997633%7Ctwgr%5E387fc42a8a59bb4b280f39fc4c67343a4e02e9c2%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fdinasuvadu.com%2Fthe-police-slapped-the-woman-farmer%2F

    மேலும், இந்த சம்பவத்தின் போது ஏராளமான விவசாயிகள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த போராட்டத்தால் முதல்வரின் முதன்மைச் செயலர் வேணு பிரசாத் உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகளுடனான சந்திப்பு மே 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    No comments