கோடை வெயிலில் இருந்து மக்களை தற்காத்துக் கொள்ள கோவில்பட்டியில் பொதுமக்களுக்கு இலவசமாக குடை, மோர் வழங்கி சிறப்பித்த திமுக நகர் மன்ற உறுப்பினர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை எதிரே கோடை காலத்தில் மக்களின் தாகத்தை போக்குவதற்காக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு தினந்தோறும் பொது மக்களுக்கு இலவசமாக மோர் , குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அறிவுறுத்தலின் பேரில் இன்று கோவில்பட்டி 22 வது வார்டு நகர் மன்ற திமுக உறுப்பினர் ஜேஸ்மின் லூர்து மேரி பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக குடைகளை வழங்கினார்.
இந் நிகழ்வில் மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments