கோணமூலை ஊராட்சியில் பொதுமக்களிடம் பவானிசாகர் எம் எல் ஏ. அ.பண்ணாரி குறைகளை கேட்டறிந்தார்
ஈரோடு மாவட்டம் , பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் ஒன்றியம் , கோணமூலை ஊராட்சியில் பொதுமக்களை பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினரும், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் அ.பண்ணாரி நேரில் சந்தித்து அப்பகுதியில் உள்ள குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்களின் கோரிக்கையான புதிதாக அப்பகுதிக்கு மயானம் மற்றும் வழித்தடத்தை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தார்கள். பொதுமக்களின் கோரிக்கையை விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு நிறைவேற்றி தருவதாக பவானிசாகர் எம் எல் ஏ ., அ.பண்ணாரி உறுதி அளித்தார். நிகழ்வின் போது ஈரோடு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் தேவராஜ் , சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் என்.என்.சிவராஜ் , ஊராட்சி கழக செயலாளர் காமு (எ)மணிகண்டன் , கோணமூலை ஊராட்சி வார்டு உறுப்பினர் மவுலீஸ்வரன் மற்றும் அஇஅதிமுக கிளை கழக செயலாளர்கள் , அப்பகுதி பொதுமக்கள் நிகழ்வின் போது உடன் இருந்தனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments