• Breaking News

    கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் நடைபெற்ற கோடைகால பயிற்சி கால்பந்து போட்டி - வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு பாராட்டு சான்றிதழும் வழங்கி கெளரவிப்பு


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ். துரைசாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கோவில்பட்டி கால்பந்து கழகம் சார்பில் பள்ளி சிறுவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாமின் இறுதி நாளான இன்று 7 நபர்களுக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது.

    கடந்த 8ஆம் தேதி துவங்கிய கோடைகால பயிற்சி கால்பந்து பயிற்சி முகாமில்  சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளிகளில் இருந்து 50 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 

    இக் கால்பந்தாட்ட  இறுதிப் போட்டியில் நாடார் மேல்நிலைப்பள்ளி அணியும் காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியும் மோதியதில் இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் நாடார் மேல்நிலைப்பள்ளி முதல்  பரிசையும்  2 வது  பரிசை காமநாயக்கன்பட்டி அரசு பள்ளியும் 3 வது  பரிசை எடுஸ்டார் ((சி.பி.எஸ்.சி பள்ளி)) அணியும்  தட்டிச் சென்றனர்.

    தொழிலதிபர் பொண்ணுவேல் நாடார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயமும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கி கௌரவித்தார்.

    No comments