கோவில்பட்டி அருகே நடைபெற்ற கோவில் திருவிழா- முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி கிராமத்தில் உச்சி மகாகாளியம்மன் திருக்கோயில் வைகாசி மாத கொடை திருவிழாவை முன்னிட்டு தீர்த்த குடம் எடுத்தல் அக்னி சட்டி எடுத்து ஊர்வலம் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி நிறைவேற்றினர் மேலும் சிறப்பு பூஜைகள் சிறப்பு தீபாரணங்கள் நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் அன்புராஜ், நகர மன்ற உறுப்பினர் கவியரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments