அறந்தாங்கியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்ட தமிழக அரசிடம் பணம் இல்லாததால் பல வருடங்களாக வாடகை இடத்தில் இயங்கும் அவலம் ?
புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் பேருந்துகள்,கனரக வாகனங்கள்,பள்ளி,கல்லுரி வாகனங்கள்,லாரிகள்,கார்கள்,மற்றும் இரு சக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் அறந்தாங்கி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தான் பதிவு செய்யபடுகின்றது. ஆனால் அறந்தாங்கி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கிடையாது. இது குறித்து சமூக ஆர்வலர் மோ.சரவணமுத்து கூறுகையில் : அறந்தாங்கிக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் 2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பல வருடங்களாக வாடகை கட்டிடத்தில் தான் இயங்குகின்றது. அதன் பிறகு 3 ஆட்சியில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இதற்கான முயற்சிகள் எடுக்கவில்லை. அறந்தாங்கி,ஆவுடையார்கோவில்,மணமேல்குடி ஆகிய 3 தாலுக்காக்களை ஒன்றிணைத்து அறந்தாங்கி சட்ட மன்ற தொகுதியாக உள்ளது.ஆனால் அறந்தாங்கியில் அரசு இடத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் இல்லை என பொது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சமூக ஆர்வலர் மோ.சரவணமுத்துஅறந்தாங்கி வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கும் அலுவலகமானது திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான கட்டிடமாகும். அறந்தாங்கியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்ட இடம் இல்லையா? அல்லது தமிழக அரசிடம் பணம் இல்லையா ? பேனா சிலை வைக்க பணம் இருக்கும் பொழுது வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க எப்படி அரசிடம் பணம் இல்லாமல் இருக்கும்? அறந்தாங்கியில் வட்டார போக்குவத்து அலுவலகம் அரசு இடத்தில் கட்டுவதற்கு யாரேனும் முட்டுகட்டையாக இருக்கிறார்களா? என பல்வேறு கேள்வி எழுகின்றன. ஒரு தனிநபர் வருமானத்திற்காக அரசு வாடகை கொடுத்து செயல்படாமல்,அறந்தாங்கியில் அரசு இடத்தில் நிரந்தரமான வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்ட வேண்டும். புதுக்கோட்டை மாவட்டதில் இருக்கின்ற இரண்டு அமைச்சர்கள் இதற்காக முயற்சி செய்யவேண்டும் என சமூக ஆர்வலர் மோ.சரவணமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments