• Breaking News

    குத்தாலத்தில் ஹிந்து சமய பண்பாட்டு வகுப்பு நிறைவு விழா கோலாக கொண்டாட்டம்


    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தனியார் திருமண் மடத்தில் ஹிந்து தர்ம விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஹிந்து சமய பண்பாட்டு வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு டாக்டர் பாலாஜி தலைமை ஏற்றார்.லயன்ஸ் முன்னாள் மண்டல தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.

    மங்கள குரு சேவா சங்கம்  மோ கோவிந்தராஜன் அனைவரையும் வரவேற்றார்.ஹிந்து தர்ம விழிப்புணர்வு இயக்கம் கார்த்திக் சிறப்புரையாற்றினார்.விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் காரியகர்த்தா  குரு கிருஷ்ணா மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.

    இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்துகொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.நிகழ்ச்சியை சுபிக்ஷா ஹிந்தி வித்யாலயா தாளாளர் ஜானகி ஜெயராமன்  தொகுத்து வழங்கினார். 

    விழாவுக்கான ஏற்பாடுகளை ஹிந்து தர்ம விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயகிருத்திகா பட்டாபிராமன் செய்திருந்தார். 

    நிகழ்ச்சியில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சித்ரா முத்துக்குமார், பாஜக மத்திய மண்டல் தலைவர் செந்தில், பாஜக நகர தலைவர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    No comments