• Breaking News

    இனி கருணாநிதி பிறந்த நாள் அன்று குழந்தைகளுக்கு இனிப்பு பொங்கல்


     மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாளன்று குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    வரும் ஜூன் 3-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சத்துணவு மற்றும் குழந்தைகள் மையங்களில் ‘இனிப்பு பொங்கல்’ வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் தமிழ்நாட்டிலுள்ள 43,094 சத்துணவு மையங்களின் மூலம் 44.72 இலட்சம் மாணவ மாணவியர்களும் 54439 குழந்தைகள் மையங்களின் மூலம் 14.40 இலட்சம் குழந்தைகளும் பயன் பெறுவர்.

    சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் மாணவ மாணவியர்களுக்கு முன்னாள் முதலமைச்சர்களின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதுபோல் இனி வரும் காலங்களில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என அரசாணை வெளியிடபட்டுள்ளது.

    No comments