• Breaking News

    கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கை துப்பாக்கி வழங்க வேண்டும்... தமிழக முதல்வருக்கு விஏஓ சங்கம் கோரிக்கை...


    தமிழ்நாட்டில் நேர்மையான விஏஓக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்புக்காக தமிழக அரசு கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, விஏஓ சங்கத்தின் சார்பில் கடிதம் அனுப்பியுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தற்காப்பு பயிற்சியளித்து கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தூத்துக்குடி முறப்பாடு கிராம நிர்வாக அலுவலர் மணல் கடத்தலை தடுத்ததால் கொலை செய்யப்பட்ட சூழலில், விஏஓ சங்கம் முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளது. மேலும், கிராம நிர்வாக அலுவலர்கள் அளிக்கும் புகார் மீது காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

    No comments