• Breaking News

    ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி செயல் வீரர்கள் கூட்டம்... மாநில தலைவர் காடேஸ்வரா கலந்து கொண்டு சிறப்புரை...

     


    ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி செயலாளர்கள் கூட்டம் நம்பியூர் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சம்பத் தலைமை தாங்கினார்.

    இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில தலைவர் காடேஸ்வராசிறப்பு உரையாற்றினார்.

    அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த மாநில தலைவர் காடேஸ்வரா கூறிய போது ...

    விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்துள்ளனர். அவர்களுக்கு ரூ. 10 லட்சம் மற்றும் ரூ.50,000 கொடுத்துள்ளது வேடிக்கையாக உள்ளது.

    உளவுத்துறைக்கு தெரிந்தும், காவல்துறையில் அதிகாரிகள் பலர்,  ஒரு பதவிக்கு வரும் போது பல லட்சம் வரை கொடுத்து அந்த பதவிக்கு வருவதால், அவர்கள் பணம் சம்பாதிப்பதையே நோக்கமாக வைத்து சமூக விரோத செயல்களுக்கு துணை போவதால் இவ்வாறு  கள்ளச்சாராயம்  சாவு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வருகிறது.

    தி கேரளா ஸ்டோரி படத்தை தமிழக அரசு தடை செய்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் படம் பார்க்க யாரும் வரவில்லை  என தமிழக அரசு கூறியும் நல்ல படத்தினை பார்க்க விடாமல் முஸ்லிம் ஓட்டு அரசியலுக்காக போலீஸ் மூலம் தடுத்துவிட்டு, இவ்வாறாக கூறுகின்றனர்.

    கூடக்கரையில் செல்லாண்டி அம்மன் கோவில் விக்கிரகங்கள் காணவில்லை என பலமுறை புகார் அளித்தும் திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. 

    அறநிலையத் துறையினர் அக்கோவிலுக்கு வழங்கப்பட்ட பூஜைக்கான நிதியினை முறைகேடாக வாங்கி பயனடைந்துள்ளனர்.இதனை வெளிப்படுத்துவோம். 

    சத்தி மற்றும் கே.என்.பாளையம் கோவில்களில் நடைபெற்ற திருவிழாவில் முஸ்லிம்கள் தேவையில்லாமல் புகுந்து பிரச்சினையில் ஈடுபட்டது மத கலவரத்தை தூண்ட நினைப்பது போல உள்ளது. அதற்கு காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

    இந்த அரசு தேர்தல் அறிக்கையில் கூறியவாறு டாஸ்மாக் கடைகளை மூடவில்லை.

    அதற்கு கனிமொழி எம்.பி.யும் இளம் விதவைகள் அதிகரித்துள்ளனர் என கூறினார்.

    தற்போது கள்ளச்சாராயத்தை அனுமதித்துள்ளதை பார்க்கும் போது தமிழகத்தினை சீரழிக்க இந்த திராவிட மாடல் அரசு திட்டமுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    இதனை தடுக்காவிட்டால் பெரியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    மதமாறி வேறு மதத்திற்கு சென்று விட்டு நாடார் கிறிஸ்தவர், வன்னியர் கிறிஸ்துவர் என்று மாறி சென்று அங்கு அவர்களுக்கு உரிய அந்தஸ்து கொடுப்பதில்லை.  எனவே மதமாறியிருப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதை கண்டிக்கிறேன். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து போதை பொருட்கள் வந்து கொண்டுள்ளது.

    தமிழ்நாட்டிலும் பள்ளி, கல்லூரிகளில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    உளவுத்துறையினர் இதனை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

    No comments