வெம்க்கோட்டை அகழாய்வில் சங்கு வளையல்கள் மற்றும் யானை தந்தத்தால் ஆன பகைடைக்காய் கண்டுபடிப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குட்பட்ட வைப்பாற்று கரையோரம் உச்சிமேடு பகுதியில் முதலாம் கட்ட அகழாய்வு பணிகள் முடிவுற்ற நிலையில் அதில் 3,254 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக அதே பகுதியில் கண்காட்சி அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.மேலும் இதே பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஏப்ரல் 6-தேதி துவங்கப்பட்டு 6-குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில் இதுவரை இரண்டாம் கட்ட அகழாய்வில் மட்டும் 984 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்தநிலையில் நேற்று அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சங்கு வளையல்கள் மற்றும் யானை தந்தத்தால் ஆன 191 கிராம் எடை,1.4 செ.மீ அகலம் கொண்ட பகடைக்காய் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.மேலும் பல்வேறு தொன்மையான பொருள்கள் இப்பகுதியில் இருக்கும் என தொல்லியல் துறையினர் தொடர்ந்து அகழாய்வு பணிகளை ஆர்வமாக மேற்கொண்டு வருகின்றனர்.
No comments