அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 69-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூர் கழகம் மற்றும் குத்தாலம் வடக்கு ஒன்றியம் சார்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 69 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு குத்தாலம் பேரூர் செயலாளர் எம்.சி.பாலு தலைமை தாங்கினார்.குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரவர்மன் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக முன்னாள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பவுன்ராஜ் கலந்துகொண்டு குத்தாலம் கடைவீதியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் தொடர்ந்து அங்கு உள்ள மன்மதீஸ்வரர் கோவிலில் அதிமுக சார்பாக அக்கட்சியினர் பொதுச் செயலாளருக்கு அவரது பெயரில் அபிஷேக ஆராதனைகள் செய்தனர் பின்னர் பொதுமக்களுக்கு 200 தென்னை மரக்கன்றுகளையும் வழங்கினார் இதில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர் முன்னதாக குத்தாலத்தில் இயங்கி வருகின்ற முதியோர் இல்லத்திற்கு சென்று காலை உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments