ஒயின் ஷாப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் எரிந்து நாசம்
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள கோல்ஃப் கோர்ஸ் சாலை அருகே உள்ள ஒயின் ஷாப்பில் ஞாயிற்றுக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கதினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க தொடங்கினர். 7 தீயணைப்பு வாகனங்கள் அந்த பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. சில மணி நேரங்களில் தீயையும் தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.
மேலும், இந்த பயங்கர தீ விபத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் எரிந்து நாசமானது என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments