• Breaking News

    கோபி சட்டமன்ற தொகுதி அயலூர் ஊராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பில் மேல் நிலை தொட்டி அமைக்க முன்னாள் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்


    ஈரோடு மாவட்டம்,கோபிச்செட்டிப்பாளையம் சட்ட மன்ற தொகுதியில் உள்ள  அயலூர் ஊராட்சிக்குட்பட்ட பாலப்பாளையம், மல்லிபாளையம், அயலூர், நரிக்குட்டை ஆகிய பகுதிகளில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள்  JJM குடிநீர் திட்டத்தின் கீழ் மேல்நிலைத் தொட்டி ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். உடன் ஒன்றிய குழு தலைவர் மெளதீஸ்வரன் , ஒன்றிய செயலாளர் குறிஞ்சி நாதன், நகர செயலாளர் பிரினியோ கணேஷ், வேலுச்சாமி வாத்தியார் மற்றும் அயலூர் அஇஅதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

    No comments