தமிழகத்தில் 5 தொழில் நிறுவனங்கள் தொடங்க அமைச்சரவை ஒப்புதல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது குறித்தும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் துறை வாரியாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை, செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
மேலும், குடியரசுத் தலைவர் சென்னை வர உள்ள நிலையில், இது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில் பெட்ரோனாஸ், காட்டர்பில்லர் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
No comments