மறைந்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தி அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டாரம் திருவாலங்காடு டி.பண்டாரவடை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் சார்பாக மறைந்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தி அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர் இந்நிகழ்ச்சியானது மூத்த காங்கிரஸ் நிர்வாகி டி.ஆர்.தங்கராசு தலைமையில் நடந்தது இதில் வட்டாரத் தலைவர் கோடிமங்கலம் செந்தில்,வட்டாரத் துணைத் தலைவர் பார்த்தசாரதி,டி.ஆர்.டி ரமேஷ்,மகளிர் அணி சத்யா,ராமகிருஷ்ணன், சத்யராஜ்,வாசு,விமல் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் எஸ்.ரியாத் அகமது செய்திருந்தார்.
No comments