• Breaking News

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32 ஆம் ஆண்டு நினைவு நாள் - கோவில்பட்டி நகர காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை


    1991ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த ராஜீவ் காந்தி, மே 21ஆம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் திட்டமிட்டு தற்கொலைப்படை தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா உட்பட உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடைபெற்று இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.

    துக்கநாளை அனுசரிக்கும் வகையில் நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி மண்டபத்தில் நகர காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவியும் மரியாதை செலுத்தினர் மேலும் ராஜீவ் காந்தியின் கொள்கைகளை பின்பற்றும் வகையில் பயங்கரவாதத்திற்கு எதிராக அவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

    இந்நிகழ்வில் நகரத் தலைவர் அருண்பாண்டியன் காளிதாஸ் மாநில செயலாளர் மனித உரிமை பிரிவு ,திருப்பதி ராஜா, உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    No comments