கோவில்பட்டியில் சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு நடைபெற்ற 2ம் ஆண்டு கச்சை கட்டும் விழா - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பங்கேற்று சிலம்ப வீரர் வீராங்கனைகளுக்கு கச்சை கட்டி விட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் திருமண மஹாலில் வைத்து இன்டர்நேஷனல் சிலம்பம் ஆட்ட சாலை சார்பில் மாவட்ட சிலம்பம் வீரர் வீராங்கனைகளுக்கு 2ம் ஆண்டு கச்சை கட்டும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டு சிலம்ப கலையை ஆர்வமுடன் கற்றுக்கொள்ள வருகை புரிந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு கச்சையை கட்டி விட்டு சிலம்பம் வீரர் வீராங்கனைகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
முன்னதாக பள்ளி மாணவ மாணவிகள் சிலம்பாட்டம் குறித்து கலையை வெளிப்படுத்திய விதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையின் நிகழ்வில் 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments