தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 2-ஆம் தேதி தொடக்கம்
இந்த ஆண்டு ஒரு மாதம் முன்பாகவே பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 2-ஆம் தேதி தொடங்குகிறது என்றும் பொது பிரிவினருக்கு கலந்தாய்வு ஜூலை 7-ஆம் தேதி தொடங்குகிறது எனவும் தெரிவித்தார்.
ஏற்கனவே, ஆக.2ம் தேதி பொறியியல் கலந்தாய்வு என அறிவித்திருந்த நிலையில், ஒரு மாதம் முன்கூட்டியே நடைபெறும் என அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், செப்டம்பர் 3-ஆம் தேதி பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும். மேலும், பாலிடெக்னிக் தொழில்நுட்ப படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றார். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பத்திற்கான அவகாசம் 3 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு கலை, கல்லூரிகளில் சேர சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விண்ணப்பிக்கலாம். அரசு கலை கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்கள் உள்ளன. அதன்படி, http://www.tngasa.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments