• Breaking News

    விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட கடலையூரில் நடைபெற்ற திமுக 2 ஆண்டு சாதனை தெருமுனை பிரச்சாரக் கூட்டம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பங்கேற்பு


    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிழக்கு ஒன்றியம் சார்பில் எட்டையாபுரம் அருகே உள்ள கடலையூரில் திமுகவின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

    இக் கூட்டத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமை தாங்கி பேசினார் திமுகவின் எண்ணற்ற இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார் பெண்கள் உரிமை தொகை செப்டம்பர் 15ஆம் தேதி வழங்கப்பட உள்ளது எனவே பெண்கள் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை தலைவர் ஸ்டாலின் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார்..மேலும்  சொல்லாததையும் செய்பவர்தான் தலைவர் ஸ்டாலின் என்று பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றினார்.

    இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    No comments