• Breaking News

    விளாத்திகுளம் அருகே கண்மாய் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி- அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்


    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவலார்பட்டி கிராமத்தை  பள்ளி மாணவர்கள்  சுதன் மகேஸ்வரன் மற்றும் அருண்குமார் ஆகியோர் சிவலார்பட்டி கண்மாயில்  குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்திற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து அவர்களது குடும்பத்தினரை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறி 2 லட்ச ரூபாய் நிவாரண நிதி காசோலையை வழங்கினர்.

    No comments