பொன்னியின் செல்வன்- பாகம் 2 திரைப்படம் 4 நாட்களில் 200 கோடி வசூல்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.
இப்படத்தின் விமர்சன ரீதியாக பார்க்கையில் முதல் பாகத்திற்கு எந்த அளவிற்கு நல்ல விமர்சனங்கள் வந்ததோ அதைப்போல இரண்டாவது பாகத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், படம் வெளியாக்க 4 நாட்களை கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கிறது. இப்படத்தின் விமர்சன ரீதியாக பார்க்கையில் முதல் பாகத்திற்கு எந்த அளவிற்கு நல்ல விமர்சனங்கள் வந்ததோ அதைப்போல இரண்டாவது பாகத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், படம் வெளியாக்க 4 நாட்களை கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கிறது.இந்த திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தின் முதல் பாகம் ரூ.500 கோடியை கடந்த நிலையில், விரைவில் இரண்டாம் பாகமும் ரூ.500 கோடியை கடக்கும் என படக்குழு கணித்துள்ளது.
No comments