• Breaking News

    10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்

     


    கடந்த 19-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வில்,  91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 23,971 பேர் தேர்ச்சி பெறவில்லை.

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகளுக்கு ஜூன் மாதத்தில் துணை தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் 10 மற்றும் 11ம் வகுப்பு இரு வகுப்பு மாணவர்களும் தங்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இருந்து பதிவிறக்கி கொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

    No comments