சங்கரன்கோவில் வெயிலின் தாக்கத்தினால் எலுமிச்சை பழத்தின் விலை கிடுகிடுவென உயர்வு வியாபாரிகள் மகிழ்ச்சி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் எலுமிச்சை பழம் விளைச்சல் செய்து வருகின்றனர் மேலும் கடந்த ஒரு வார காலமாக எலுமிச்சை பழத்தின் விலை 40ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விலைபோன நிலையில் தற்போது பங்குனி மாதம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் சங்கரன்கோவில் எலுமிச்சை சந்தையில் இன்று எலுமிச்சை பழம் கிலோ ஒன்றுக்கு நூறு ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வருகிறது மேலும் கேரளா என பிற மாநிலங்களுக்கும் எலுமிச்சம் பழம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறதுஎலுமிச்சை பழம் விலை உயர்வு மற்றும் பழத்தின் வரத்து அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
No comments