திருவாரூர் வடக்கு மாவட்ட வளரும் தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் திருவாரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் மாவட்டத் தலைவர் அசோக்குமார் மற்றும் இணைச் செயலாளர் அரிஸ்டாட்டில் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.வளரும் தமிழர் கட்சி மண்டல இளைஞரணி செயலாளர் பூவனூர் ராஜ்குமார் படுகொலைக்கு பிறகு இந்த கூட்டம் நடைபெறுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த கூட்டத்தில் பூவனூர் ராஜ்குமாருக்கு ஐந்து நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பட்டியலின வெளியேற்ற விவகாரத்தில் நேரடியாக மத்திய அரசு தலையிட வேண்டும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த வேண்டும் குடிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இமானுவேல் சேகரன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் தமிழகம் முழுவதும் இயற்கை பானமான கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும்.டெல்டா மாவட்டங்களில் அதிகரித்து வரும் கூலிப்படை கலாச்சாரத்தை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பூவனூர் ராஜ்குமார் படுகொலையில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகளை மாவட்ட காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் போன்ற ஒன்பது தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.மேலும் வளரும் தவழும் கட்சி நிறுவனத் தலைவர் பாலை பட்டாபிராமன் வரும் ஏப்ரல் ஆறாம் தேதி பட்டியல் இன வெளியேற்றம் குறித்து நடத்தும் பிரச்சார பயணத்தில் திரளாக கலந்து கொள்வது குறித்தும் பூவனூர் ராஜ்குமார் குடும்பத்திற்கு நிதி திரட்டி கொடுப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் வளரும் தமிழகம் கட்சி மாநில பொருளாளர் ஆரோக்கிய செல்வம் மாநில வர்த்தக அணி செயலாளர் பால சரவணன் மண்டல செயலாளர் பாவா உள்ளிட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments