• Breaking News

    சத்துணவு அங்கன்வாடி சங்கங்கள் கண்களில் கறுப்பு துணி அணிந்து ஆர்ப்பாட்டம்

     


    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் சார்பாக மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில்,சத்துணவு - அங்கன்வாடி திட்டங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச பென்சனாக வருவாய் கிராம  ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஓய்வுதியத்தை அகவிலைப்படியுடன் ரூ.6750 க்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள நிரந்தர பணியிடங்களில் 50% ஒதுக்கிடு செய்து தகுதியுள்ள சத்துணவு - அங்கன்வாடி ஊழியர்களை பணிமூப்பு அடிப்படையில் ஈர்த்திட வேண்டும்,காலைச் சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை தனியாரிடம் தமிழக அரசு ஒப்படைப்பதை கைவிட்டு சத்துணவு திட்டத்தில் இணைத்திட வலியுறுத்தியும் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கணகளில் கறுப்பு துணி அணிந்து கொண்டு  தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    No comments