சங்கரன்கோவிலில் பங்குனி உத்திர கோவில் திருவிழாக்களை முன்னிட்டு பூக்களின் விலை இரண்டு மடங்காக உயர்வு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் பங்குனி உத்திர குல தெய்வவழிபாட்டை முன்னிட்டு பூக்களின் விலை இரண்டு மடங்காக அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. இதில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முந்நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லி மற்றும் பிச்சிப் பூக்களின் விலை ஒரு கிலோ 700க்கும்விற்பனை செய்யப்படுகிறது.
பூ மார்க்கெட்டில் விலை ஒரு கிலோ
பழைய விலை இன்றைய விலை
மல்லி பூ 225 _ 700 ரூபாய்க்கும்,
பிச்சிபூ 300 _ 700 ரூபாய்க்கும்,
கேந்தி 80 _ 120 ரூபாய்க்கும்,
சம்பங்கி 50 _ 300 ரூபாய்க்கும்,
கோழி பூ 50 _ 120
ரோஜா 1 கிலோ 100, ரூபாய்க்கும், துளசி கட்டு ஒன்றுக்கு 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது..
No comments