மூவலூர் மார்க்கசகாய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண வைபத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்
மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட தேவாரப்பாடல் பெற்ற மங்கள சௌந்தரநாயகி சமேத மார்க்கசகாய சுவாமி கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் சுவாமி சதாசிவ மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இறைவனை சௌந்தர நாயகி அம்பாள் திருக்கல்யாணம் புரிந்த தலமாகவும்,துர்காபரமேஸ்வரி மகிஷாசூரனை வதம் செய்த பின்னர் இங்கு எழுந்தருளியுள்ள சுவாமியை வழிபட்டு அகோர வடிவிலிருந்து சௌந்தர்ய வடிவு பெற்ற தலமாகவும்,வழித்துணை நாதருக்கு இதய நோய் தீர்த்த தலமாகவும்,பிப்பல மகரிஷி முக்தி அடைந்த தளமாகவும் புராண வரலாறு கூறுகிறது.
மேலும் இத்தளத்தில் எழுந்தருளியுள்ள மார்க்க சகாய சுவாமியை பிரம்மா,விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் வழிபட்ட தலமாகவும் இது விளங்கி வருகிறது.இக்கோவிலில் சுவாமிக்கு வில்வ அர்ச்சனை செய்து அந்த வில்வத்தை தண்ணீரில் விட்டு பருகினால் இதய நோய் தீரும் என்பது ஐதீகம்.பல்வேறு சிறப்புகளையுடைய இவ்வாலயத்தின் பங்குனி உத்திர பிரும்மோத்ஸவ பெருவிழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7ம் திருநாளின் முக்கிய விழாவான திருக்கல்யாண உற்சவம் இன்று நடைபெற்றது.இதையொட்டி,மார்க்கசகாய சுவாமி வென்பட்டு உடுத்தி சௌந்தரநாயகி அம்பாளள் சிகப்பு பட்டு உடுத்தி திருஆபரணங்கள் அணிந்து கோயில் வெளிப்பிரகாரத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டனர்.ஊஞ்சல் உற்சவம்,மாலை மாற்றுதல்,கன்னிகாதானம் செய்யப்பட்டது.
பின்னர் சுவாமி அம்பாளுக்கு பட்டாடை சாத்தப்பட்டு திருமாங்கல்ய தாரணம் (திருக்கல்யாணம்) நடைபெற்றது.பின்னர் பூரணாகுதி செய்யப்பட்டு அலங்கார தீபம் உள்ளிட்ட 16 வகையான சோடச தீபாராதனையுடன் மகாதீபாரதனை நடைபெற்றது.இந்த திருக்கல்யாண வைபவத்தை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். வருகின்ற 3ம் தேதி திருத்தேரோட்டமும் 4ம் தேதி காவிரியில் தீர்த்தவாரி உற்ச்சவமும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments