ஏப்ரல் 23 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 3 மணிக்கு, மகாகவி பாரதியார் இல்லம்,திருவல்லிக்கேணி, சென்னையில் மலர்க்கண்ணன் பதிப்பகம் 14 வது ஆண்டு விழா நடை பெற்றது. இந்த விழாவில் 21 எழுத்தாளர்களின் 100 நூல்கள் வெளியீடு மற்றும் சேவை விருதுகள் வழங்குதல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒன்றிணைத்த சமாரியர்கள் அமைப்பின் நிறுவனர் மற்றும் முன்னாள் மிஸ் தமிழ்நாடு டைட்டில் வின்னர் மற்றும் மனோ தத்துவ நிருபர் முனைவர் கவிஞர் ஷீபா லூர்தஸ் சிறப்பு விருந்தினராக இந்த விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
புது எழுத்தாளர்களுக்கு முக்கிய குறிப்புகளும் சிறந்த படைப்புகள் எப்படி நாளைய இளைஞர்களை சீர் படுத்துகிறது பற்றி சொற்பொழிவாற்றினார். மேலும் நக்கீரன் கோபால் அவர்களிடம் ‘சேவைச்செம்மல் அன்னை தெரசா விருது’ பெற்றார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நக்கீரன் கோபால், கஸ்தூரி ராஜா,தயாரிப்பாளர் & இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன்,DSR.சுபாஷ் (இந்திய பத்திரிக்கையார்கள் சங்கம்), மருத்துவர் ரேணுகா ராமகிருஷ்ணன், கவிஞர் உமா பாரதி மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
0 Comments