எலத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் வட்டார கல்வி அலுவலர் சுப்பையாவுக்கு பொதுமக்கள் பாராட்டு
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயமணி தலைமை தாங்கினார்.கொரோனா காலத்தில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விளையாட்டு விழா போன்ற எந்த ஒரு நிகழ்ச்சியும் பள்ளிக்கல்வித்துறையில் சார்பில் நடை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதை தொடர்ந்து ஆண்டு விழாவில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியக்கு பரிசு பொருள்கள் அனைத்தையும் முன்னாள் மாணவர்கள் சேரன் சரவணன் வழங்கினார்.
மேலும் இவ்விழாவிற்காக முன்னாள் மாணவர்கள்சார்பாக ரூ-15000/- வழங்கப்பட்து.
மேலும் விழாவில் எஸ் எம் சி குழு தலைவர் விஜயா எஸ் எம் சி உறுப்பினர்கள் P.T.A தலைவர் சத்யராஜ் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்கள் முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நம்பியூர் வட்டாரத்தில்இயங்கி வரும் பள்ளிகளுக்கு இந்த ஆண்டு சிறப்பான முறையில் ஆண்டு விழாவை நடத்த வேண்டும் என்ற முழு மூச்சுடன் செயல்பட்ட வட்டார கல்வி அலுவலர் சுப்பையாவிற்கு இறுதியாக பொதுமக்கள் மற்றும் முன்னாள் சார்பாக பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
இவ்விழா ஏற்பாட்டினை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயமணி பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் செல்வகுமார் அப்துல் காதர் சகுந்தலா விஜய சௌந்தரம் காந்திமதி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments