கீழ்வேளூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கடுமையான எடை குறைந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா
தமிழக முதல்வரின் முன்னோடி திட்டமான "ஊட்டச்சத்தை உறுதிசெய்" திட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் தமிழக முதல் & அமைச்சர் தொடங்கி வைத்தார் அதன் தொடர்ச்சியாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா இராதாமங்கலம் ஊராட்சி சமுதாய கூடத்தில் நடைபெற்றது விழாவிற்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பொறுப்பு மைதிலி தலைமையில் வகித்தார். விழாவில் கீழ்வேளூர் வட்டார அளவிலான ஜீரோ முதல் ஆறு மாதம் வரை உள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு, ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரை உள்ள எடை குறைந்த குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தினை மாவட்ட திட்ட அலுவலர் சியாமளா இராதாமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா ஆகியோர் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து கீழ்வேளூர் வட்டார அளவில் ஆரோக்கியமான மூன்று குழந்தைகளுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது முன்னதாக அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சியினை அனைவரும் பார்வையிட்டு சிறுதானிய உணவுகளில் பயன்கள் குறித்த உறுதிமொழி அனைவரும் ஏற்றுக்கொண்டனர். விழாவில் வட்டார மேற்பார்வையாளர் நிலை ஒன்று ஜெயலட்சுமி, வட்டார ஒருங்கிணைப்பாளர் பூரணி, கடம்பங்குடி பள்ளி தலைமை ஆசிரியர் நரேஷ் குமார், ராதா மங்கலம் ஊராட்சி செயலர் மாதவன், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி மாணவ மாணவிகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.
No comments