ஜி.பி.முத்து மருத்துவமனையில் அனுமதி.... அதிர்ச்சியில் ரசிகர்கள்....
டிக் டாக் மூலம் புகழ்பெற்ற ஜி.பி. முத்து, தற்போது சின்னத்திரை மதல் வெள்ளித்திரை வரை அனைத்திலும் பிரபலமாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன்-4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், ஜி.பி. முத்து திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனை கண்ட அவரது ரசிகர்கள் அதிர்ச்சியுடன் என்ன ஆச்சு தலைவரே? என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
No comments