• Breaking News

    புதுக்கோட்டை அருகே ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் பணம்,நகை,வெள்ளி பொருட்கள் கொள்ளை



     புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே மீமிசல் சாலையில் வசிப்பவர் சந்திரசேகரன். இவர் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இந்நிலையில் இவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு சவரன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ. 10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து, சந்திரசேகரன் கொடுத்த புகாரின் பேரில், ஆவுடையார்கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments