• Breaking News

    இலவச கழிப்பறையை,கட்டண கழிப்பறையாக மாற்றி அறந்தாங்கி நகராட்சி சாதனை


    அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறையை,கட்டண கழிப்பறையாக மாற்றி அறந்தாங்கி நகராட்சி சாதனை படைத்திருப்பதாக சமாஜ்வாடி கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் மோ.சரவணமுத்து தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் தெரிவித்தாவது:

    இலவச கழிப்பறையை புதுபித்து கட்டண கழிப்பறையாக மாற்றியது

    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகராட்சிக்கு அடுத்த படியாக அறந்தாங்கி தான் நகராட்சியாக உள்ளது.சிறந்த நகராட்சி என விருதும் பெற்றது.அறந்தாங்கி பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.அனைத்து மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சி பேருந்து நிலையங்களிலும் கட்டண கழிப்பறையும்,இலவச கழிப்பறையும் இருக்கும் என அனைவருக்கும் தெரிந்தவிசயம் தான் அதுவும் எவ்வளவு சுகாதாரமாக இருக்கும் என்பதும் தெரியும். 

    பழைய கட்டண கழிவறை

    இதே போல தான் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பறையும்,இலவச கழிப்பறையும் இருந்தது.தற்போது இலவச கழிப்பறையாக இருந்ததை புதுப்பித்து கட்டண கழிப்பறையாக மாற்றி சாதனை படைத்துள்ளது அறந்தாங்கி நகராட்சி.மக்கள் எதிர்பார்த்தது புதுபித்து மீண்டும் இலவசமாக இருக்கும் என்பது,ஆனால் கட்டணம் வசூல் செய்வார்கள் என யாரும் எதிர்பார்த்திராத ஒன்று. வேறு வழியில்லாமல் மக்களும் பணம் கொடுத்து தான் செல்கின்றனர். இதில் கொடுமையான விசயம் என்னவென்றால் அனைத்து பேருந்து நிலையங்களிலும் இலவசமாக சிறுநீர் கழிக்கவாது இலவச கழிப்பறை இருக்கும்,அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் அதற்கும் வழியில்லை.சிறுநீர், மலம் கழிக்க ரூ.5ம்,குளிப்பதற்கு ரூ.10ம் வசூல் செய்கின்றனர்.என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மோ.சரவணமுத்து சமாஜ்வாடி கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர்

    பொதுமக்கள் கோரிக்கை என்னவென்றால் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறை அமைத்து தர வேண்டுமென்பதே. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.மக்களின் கோரிக்கையை அறந்தாங்கி நகர்மன்ற தலைவரும்,ஆணையரும் நிறைவேற்றுவார்களா என்பதை பொருந்திருந்து பார்ப்போம்.




    No comments