• Breaking News

    நம்பியூர் அருகே உள்ள கெட்டிச்செவியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா


    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெட்டிச் செவியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்ஆண்டு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு தலைமையாக கெட்டிச் செவியர் ஊராட்சி மன்ற தலைவர் மகுடேஸ்வரன் கலந்து கொண்டார்.

    விழாவில் 2022-2023க்கான ஆண்டறிக்கையை பள்ளியின் தலைமையாசிரியர் சித்ரா வாசித்தார்.

    பள்ளியில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்குஎஸ்எம்சி பிடிஏ மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பரிசினை வழங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராகஜெயவர்மா டெக்ஸ் பொது மேலாளர் பொன். விஸ்வநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்

    மேலும் ஆசிரியர்களுக்கான நினைவுப்பரிசினை குளத்துப்பாளையம சரஸ்வதி பழனிச்சாமியின் புதல்வன் சிவக்குமார் வழங்கினார்.

    அதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இவ்விழாவில் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

    விழாவில் கலந்து கொண்ட பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

    இவ்விழா ஏற்பாட்டினை பள்ளியின் தலைமை ஆசிரியர் சித்ரா மற்றும் உதவி ஆசிரியர்கள் இந்துமதி ஷெர்லி பிரசில்லா பூர்ணிமா மற்றும் சிவக்கொழுந்து ஆகியோர் செய்திருந்தனர்.

    இவ்விழாவில் கலந்து கொண்ட மாணவ மாணவியரின் பெற்றோர்கள் கூறுகையில் ஆண்டு விழாவானது பள்ளியின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் கலை திறனுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்று வெகுவாகபாராட்டிச் சென்றனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

    No comments