• Breaking News

    நம்பியூர் பேரூராட்சியில் தொடர்ந்து வெறி நாய்கள் தொல்லை.... பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் நம்பியூரை மையப் பகுதியாக கொண்டு விளங்குகிறது.

    மேலும் கோவை கோபி புளியம்பட்டி பிரதான சாலை தொடர்ந்து வெறிநாயக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுவருகிறது.

    இது சம்பந்தமாக பேரூராட்சி நிர்வாகம் மாவட்ட ஆட்சியர் போன்ற துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் உள்ளது.

    நம்பியூரில் 5க்கும் மேற்பட்டஅரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது.

    இந்நிலையில் காலை நேரங்களில் பணிக்குச் செல்லும் பொது மக்களுக்கு வெறிநாய்கள் துரத்தி விபத்துகளையும் ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும்உள்ளது பள்ளி குழந்தைகள் மிகவும் அச்சத்துடன் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

    பொதுமக்கள் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகம் வெறி நாய்களை  கட்டுப்படுத்தி பொதுமக்களை பாதுகாக்கவும் விபத்துகளை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

    No comments