• Breaking News

    மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண விழாவில் பங்கேற்க கட்டணம் எவ்வளவு? எவ்வாறு முன்பதிவு செய்வது?

     


    மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண விழாவில் பங்கேற்க ரூ.500 மற்றும் ரூ.200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கட்டணமில்லா தரிசனத்திற்கு தெற்கு கோபுரம் வழியாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். திருக்கல்யாணம் பார்க்க https:///hrce.tn.gov.in மற்றும் https://maduraimeenakshi.hrce.tn.gov.in ஆகிய இணையதளங்களில் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி, ஒருவர் ரூ.500 கட்டண சீட்டை இரண்டு முறையும், ரூ.200 கட்டண சீட்டை மூன்று முறை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.

    No comments