• Breaking News

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷ்ய விஞ்ஞானி மாரடைபால் பலி

     


    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷ்ய விஞ்ஞானி கிளினின் கோ வடின் மாரடைப்பால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு நிலையத்தில் உள்ள உலையின் 3வது மற்றும் 4வது அலகு கட்டுமானப் பணியில் ரஷ்ய விஞ்ஞானிகள் குழு தலைவரான கிளினின் கோ வடின் கடந்த 5 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், இன்று ரஷ்ய விஞ்ஞானி வடினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அவரின் உடலை தூதரகம் மூலம் ரஷியா கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    No comments