• Breaking News

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

     

    கோவையில் நாளை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக கோவையில் நாளை 28ஆம் தேதி கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கோவை சின்னியம்பாளையம் அவினாசி ரோட்டில் உள்ள பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கோவை, சேலம் மண்டலங்களை சேர்ந்த நிர்வாகிகள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கமல்ஹாசனின் கவனம் கூட்டணி அரசியல் நோக்கி திரும்பியது குறிப்பிடத்தக்கது.

    No comments