பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாச பட்டி அருகே மலை மேல் பெரிய நாயகி அம்மன் உடனுறை கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.கோவிலில் பங்குனி மாதம் சோமவார பிரதோஷ வழிபாடு முன்னிட்டு நந்திகேஸ்வரருக்கும் கைலாசநாதர் இருக்கும் ஒன்பது வகையான அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டது.கோவிலில் உலக நன்மைக்காக கூட்டு வழிபாடு நடைபெற்றது.வருகை தந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப்,செயலாளர் க.சிவகுமார்மற்றும் குழு உறுப்பினர்கள் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.வருகின்ற 5.4.2023ம் தேதி பௌர்ணமி தினத்தை பற்றி கிரிவலமும் மாபெரும் அன்னதானமும் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments