தீ விபத்தால் சேதம் அடைந்த குடும்பத்திற்கு தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் நேரில் சந்தித்து நிதி உதவி
ஈரோடு மாவட்டம் கெட்டிசெவியூர் அருகே உள்ள ஓடக்காடு பகுதியில் பெருமாள் என்பவரின் வீடு தீ பற்றி விபத்தால் சுமார் 7 லட்சம் மதிப்புள்ள பொருள் மற்றும் சொத்து ஆவணங்கள் எரிந்து சேதம் அடைந்ததை ஒட்டிதமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் பொன். விஸ்வநாதன் நாடார் நேரில் சென்று தீ விபத்தில் சேதம் அடைந்த பொருமாள் வீட்டை பார்வையிட்டார்.
அதை தொடர்ந்து ரொக்கம் ரூ5000/- மற்றும் பொருள் உதவியாக 6000 மதிப்புள்ள அரிசி,மளிகை மற்றும் துணிகள் கொடுத்து ஆறுதல் கூறினார் .
மேலும் தீ விபத்தில் சேதம் அடைந்த பள்ளி சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை இது போன்ற ஆவணங்களை வட்டாட்சியரிடம் இருந்து பெற்றுத்தர உறுதி அளித்தார்.
இந்த நிகழ்வில் கெட்டிசெவியூர் ஊராட்சி மன்ற தலைவர் மகுடேஸ்வரன் உடன் இருந்தார்.
மாநில துணைச்செயலாளர் கார்த்திக் , மாநில ஒருங்கிணைப்பாளர் எம் .கே. டி.கோவிந்தசாமி, மாநில நிர்வாகி ஈஸ்வரன் மாநில வர்த்தக அணி செயலாளர் லேண்ட் செந்தில் மாநில நிர்வாகி சோமு ,ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராஜ் ,திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் ரகுபதி, நம்பியூர் ஒன்றிய தலைவர் யுவராஜ் மற்றும் நிர்வாகிகள் ஆறுமுகம் ,கலைவாணன் , சக்திவேல், குமரவேல், கெட்டிசெவியூர் நிர்வாகிகள் அய்யாவு, ஆனந்த், ஐயப்பன்,நடராஜ், விஜயகுமார், ஆகியோர் உடன் இருந்தனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments