பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் ; ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அதிரடி

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா பரவல் என்பது சற்று அதிகரித்து உள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், தற்பொழுது ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அம்மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவித்துள்ளார். கொரோனா அறிகுறி இருந்தால், உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதுடன் அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதன்மூலம் தமிழ்நாட்டிலேயே கட்டுப்பாடு விதித்த முதல் மாவட்டமாக உள்ளது. 

Post a Comment

0 Comments