சாலையில் சென்று கொண்டியிருந்த ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பேருந்து எரிந்து நாசம்
கோயம்புத்தூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் ஆம்னி பேருந்து வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான ஆம்னி பேருந்து ஒன்று வழக்கம் போல் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து கோவைக்கு 14 பயணிகளுடன் சென்றது.
இந்த ஆம்னி பேருந்தை இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த அகிலன் (44) என்பவர் ஒட்டி சென்று உள்ளார்.இந்த நிலையில் அகிலன் ஒட்டி வந்த ஆம்னி பேருந்து விருதுநகர் மாவட்டம் சாத்தூர் புறவழிச்சாலையில் சென்று கொண்டியிருந்த போது பேருந்தில் இருந்து திடீரென டீசல் டேங்கில் இருந்து வெடி சத்தம் ஏற்பட்டு ஆம்னி பேருந்தில் இருந்து புகை வந்து உள்ளது.
இதனை அடுத்து ஓட்டுநர் பேருந்து நிறுத்தி பேருந்தில் இருந்த பயணிகளை அவசரமாக கீழே இறக்கி விட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து ஒட்டுநர் அகிலன் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து உள்ளனர். இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் ஆம்னி பேருந்து முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.
மேலும் சாத்தூர் தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் ஆம்னி பேருந்து முற்றிலும் எரிந்து கருகியது. மேலும் இந்த தீ விபத்தால் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஆம்னி பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் அதிர்ஷ்டமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் தீ விபத்து ஏற்பட்ட ஆம்னி பேருந்து பயணம் செய்த பயணிகளை மாற்று பேருந்தில் தங்களுடைய ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments