• Breaking News

    சங்கரன்கோவிலில் மருத்துவக் கழிவு பாட்டில்கள்,மின் சாதன கழிவுகள் மற்றும் மதுபான பாட்டில்கள் உடைந்த நிலையில் கிடப்பதால் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை


    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருநெல்வேலி செல்லும் சாலையில் அமைந்துள்ள கருப்பசாமி கோவில் பின்புறம் உள்ள கண்மாயில் இரவு நேரங்களில் மர்ம நபர்களால் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம்மருத்துவக் கழிவு பாட்டில்கள் மற்றும் மின்சாதன கழிவு பொருட்கள் மதுபான பாட்டில்கள் ஆகிய கழிவுகளை கொட்டி எரிக்கப்பட்டு பாட்டில்கள் சிதைவிட்ட நிலையில்  காணப்படுகிறது.மேலும் அப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது மேலும் கண்மை நீரை நம்பியே விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர் மேலும் கன்மாயில் இது போன்ற கழிவுகள் கொட்டப்படுவதால் விவசாயிகள் கண்மாயை கடந்து தான் விவசாய நிலங்களுக்கு செல்லும் நிலை இருப்பதால் சிதை ஊட்டப்பட்ட பாட்டில்களால் காயம் ஏற்படுவதாகவும்மேலும் நீருக்கு மாசு ஏற்படுவதாகவும் கூறுகின்றனர் மேலும் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு  நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




    No comments