கட்சியின் சட்டவிதியை சர்வாதிகார கும்பல் அபகரிப்பு: ஓபிஎஸ்
அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே அதிகார மோதல் தொடர்ந்து நடைபெறு வருகிறது. இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாடு குறித்து ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், சட்டப்படி எங்கள் பக்கம்தான் நியாயம் இருக்கிறது. மக்களை சந்தித்து நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என நிரூபிப்போம்; கட்சியின் சட்டவிதியை சர்வாதிகார கும்பல் அபகரிப்பு செய்வதை அழிக்கிற மாநாடாக இந்த மாநாடு அமையும்.
எம்.ஜி.ஆர், தொண்டர்களுக்கு அளித்த உரிமை மீட்டெடுக்கப்படும். சட்டப் போராட்டத்தில் உறுதியாக ஒன்னரை கோடி தொண்டர்கள் வெற்றி பெறுவார்கள். எம்.ஜி.ஆர். காலம் முதல் ஜெயலலிதா காலம் வரை, கட்சியின் வளர்ச்சிக்காக பணியாற்றியவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த இயக்கத்தை நடத்துவோம். கர்நாடக தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னத்தை கேட்போம் என தெரிவித்துள்ளார்.
No comments