பாஜக சார்பில் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து பாதயாத்திரை செல்ல அனுமதி மறுத்ததால் பரபரப்பு
தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை ஏப்ரல் 14ம் தேதி திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை கண்டிப்பாக வெளியிடுவார் - என பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் தகவல்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இ.குமாரலிங்கபுரம் கிராமத்தில் பி.எம்.மித்ரா திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைப்பதற்கு 2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சாத்தூரில் இருந்து இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் திருக்கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்ல பாஜக கட்சி சார்பில் ஏற்பாடு செய்யபட்டு இருந்தது.
இந்த நிலையில் சாத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலில் இருந்து இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் திருக்கோவிலுக்கு பாதயாத்திரையாக பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் தலைமையில் புறப்பட தயாராக இருந்த போது பாஜகவினர் பாதயாத்திரைக்கு காவல் துறையினர் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் தீடீரென்று சாத்தூர் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு 500க்கு மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டதால் மெயின் பஜார் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் பேசிய பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் பாஜக கட்சியின் புது கணக்கு நாளையில் இருந்து தொடங்குகிறது என்றார். மேலும் தமிழகத்தில் எடுக்கப்பட்ட சர்வேயில் 100 க்கு 40 சதவீதம் பேர் பாஜக கட்சிக்கு வாக்கு செலுத்த உள்ளதாக தெரிவிக்கின்றனர் என்றார்.
தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்து உள்ளது என்றார். அடுத்து நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு உள்ளாக பாஜக வாக்கு சதவீதம் உயர்ந்தும் திமுகவின் வாக்கு சதவீதம் இன்னும் குறைந்து போகும் சூழ்நிலை உள்ளது என்றார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை ஏப்ரல் 14ம் தேதி திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை கண்டிப்பாக வெளியிடுவார் அப்போது யார் எல்லாம் அரசியல் நிர்வாணமாக இருக்க போகிறார்கள் என்பது மிக ரகசியமாக உள்ளது என்றார்.
No comments