ட்விட்டர் மூலம் இனி பணம் சம்பாதிக்கலாம்; எலான் மஸ்க் அறிவிப்பு
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து புதிய பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது, ட்விட்டரில் பதிவிடும் பதிவுகள் மற்றும் விடீயோக்கள் மூலம் பயனர்கள் பணம் சம்பாதிக்க முடியும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறிய அவர், அதிக உரையுடன் நீண்ட வீடியோக்கள், போஸ்டுகளை பதிவிடலாம் மற்றும் அவற்றை உங்களை பின்தொடருபவர்கள் பார்ப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் எனவும் இதனை பெறுவதற்கு செட்டிங்ஸில் உள்ள மானிடைஸ் (monetize) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் என்று எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.
மேலும், அடுத்த 12 மாதங்களுக்கு, ட்விட்டர் பணம் எதையும் வைத்திருக்காது. உங்கள் பதிவுகள் மூலம் நாங்கள் பெறும் பணத்தை இனிமேல் நீங்கள் பெறுவீர்கள். இதன் மூலம் iOS மற்றும் Android இல் 70 சதவீதமும் இணையத்தில் 92 சதவீதமும் பணம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் உங்கள் வேலையை மேம்படுத்தவும் நாங்கள் உதவுவோம், படைப்பாளர்களின் பண வாய்ப்பை அதிகரிப்பதே எங்கள் குறிக்கோள் என்றும் பதிவிட்டுள்ளார்.
For the next 12 months, Twitter will keep none of the money.
You will receive whatever money we receive, so that’s 70% for subscriptions on iOS & Android (they charge 30%) and ~92% on web (could be better, depending on payment processor).
After first year, iOS & Android fees…
— Elon Musk (@elonmusk)
No comments